Unofficial Website for Tamilnadu Government Nurses which provides useful Government Orders to Details about Current affairs, Tamilnadu Nurse, Tamil Nadu Government Nurse, Tamil Nadu Nurse

அரசு பயிற்சி மற்றும் மாணவ செவிலியர்களுக்கு ஆதரவு

பேடியாய் நான்

நேற்று வரை நான் தான் என்றேன் அவர்களுக்கு,
நான் இன்றி அணு இல்லை என்றேன் அவர்களிடம்,


இன்று ஆதரவு கூட இல்லை அவர்களுக்கு,
அட குரல் கூட இல்லை கூவி கூறிட,


வசூலித்து தா என்றேன்,
வழக்காடு என்றேன்,


இன்று விதியோடு விளையாடிவிட்டேன்,
அவர்களை வீதியில் தள்ளிவிட்டேன்,


எள்ளி நகையாடும் ஒருவன்,
ஏளன பார்வையில் அவர்கள்,


எனக்கென்ன வந்தது,
என் குடியா, என் வாழ்வா,


இது ஒன்றும் புதிதில்லையே எனக்கு,
என் குலத்தை அழிக்க நான் உண்டு,


என் குல ஊதியம் குறைக்க நான் உண்டு,
என் குலம் சீர்குலைய நான் உண்டு,


பிறகு என்ன இங்கு பிறருக்கு வேலை,
வாழ்வது நானகினும்


வீழ்வது என் செவிலியம் ஆகட்டும்,
உடை உடுத்தி மிடுக்கு காட்ட வேண்டாம்,


ஆண் செவிலியனே சட்டை பேண்டு உடுத்தியது போதும்,
இன்று போல் பேடியாய் பாவடை தாவணி உடுத்த போகிறேன் நான்,


உதவி செய் முடிந்தால்
என் மானம் காக்க நான் உடுத்த போகும் உடைக்கு

நன்றியுடன்
நான்

உண்ணாவிரதத்தில் இருந்த செவிலியர்கள் கைது

அரசு பயிற்சி பெற்ற செவிலியர்கள் செய்த உண்ணவிரதத்தில் கலந்து கொண்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் SIET கல்லூரிக்கு எதிரில் உள்ள திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்

தமிழகத்தில் மாணவர் செவிலியர்கள், மற்றும் பயிற்சி பெற்ற செவிலியர்கள் அரசாணையை எதிர்த்து போராட்டம்
ரோமாபுரி பற்றி எரிகிறது அரசு நர்சுகள் சங்கம் பிடில் வாசிக்கிறது

தமிழக அரசு வெளியிட்ட சுயநல அரசாணையால் இன்று தமிழகத்தில் மாணவர் செவிலியர் முதல் பயிற்சி பெற்ற செவிலியர்கள் வரை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


23-1-2012 அன்று பயிற்சி பெற்ற செவிலியர்கள் சிலர் தமிழக முதல்வரின் குறை தீர்க்கும் தினத்தில் மனு அளிக்க சென்றுள்ளனர், அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு திருமண் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

24-12-2012 அன்று மாணவர் செவிலியர்கள் தங்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்,

இதனை சிறிதும் கருத்தில் கொள்ளாத அரசு மற்றும் தனியார் செவிலிய பயிற்சி கல்லூரியின் உரிமையாளர் மற்றும் சுகாதார துறை அமைச்சர் அவர்கள் செவிலிய பயிற்சி பள்ளிகளுக்கு விடுமுறை விட்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

மெட்ராஸ் மெடிக்கல் விதியின் படி :-

The entry into the category of nurses starts with the admission into a Government Training School. It is a composite scheme of recruitment, training and absorption exclusively for Government institutions. According to the State, if a person wants a posting in a Government Hospital, the entry point is an admission in the training institution run by the Government and there is no scope for any lateral entry. The candidates who succeed in the examination and are given training in Government institutions enter into an agreement to serve the Government for a minimum period of three years after completion of their training. Therefore, the Government provides these candidates rent-free quarters, free supply of electricity, paid stipend, which includes uniform allowance and therefore, public money is spent on them. The Prospectus for admission also says "nursing students who have successfully completed their training and obtained their diplomas will be eligible for appointment as nurses. The appointment cannot be guaranteed to all or any of the successful candidates. Recruitment will be made in accordance with the Tamil Nadu Medical Subordinate Service Rules". Every year, 1795 candidates successfully come out of these Government institutions and there are more than enough candidates waiting for appointment in nurse posts. The Government is bound to protect these trainees and as observed in , having spent public money on them, the absorption of these trainee students cannot be said to be unreasonable
 என கூறியுள்ளது.

அரசு பயிற்சிக்கு செலவு செய்த பணம் முழுவதையும் இப்போது வீணடிக்க முடிவு செய்துள்ளது.


25-12-2011 இன்றும் தமிழகத்தில் மாணவர் செவிலியர்கள், மற்றும் பயிற்சி பெற்ற செவிலியர்கள் அரசாணையை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர், மேலும் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தில் போராட்டம் உணவின்றி நடைபெற்று வருகிறது







தமிழக அரசு மாணவர் செவிலியர் முதல் பயிற்சி பெற்ற செவிலியர்கள் வரை அனைவரும் போராட்டத்தில் ஈடுபடும் போது, நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் அரசு வெளியிட்டுள்ள ஆணையை எதிர்த்து இன்னும் கன்டித்து கன்டணம் தெரிவிக்காமல் உள்ளது அரசு நர்சுகள் சங்கம்.

ரோமாபுரி பற்றி எரிகிறது, சங்கம் பிடில் வாசிக்கிறது

Arrest Photos of Tamilnadu Govt Trained Nurses

to View this photos as pdf Click here

Subject: Arrest Photos of Tamilnadu Govt Trained Nurses

முதல் முறையாக பயிற்சி செவிலியர்கள் தமிழகத்தில் கைது

தமிழக வரலாற்றில் முதல்முறையாக பயிற்சி பெற்ற செவிலியர்கள் கோரிக்கை மனு கொடுக்க சென்ற போது கைது செய்யப்பட்டனர்

செவிலியர்கள் கொண்டி தோப்பு அருகில் ஒரு மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்
Around 500 Tamilnadu Govt Trained Nurses arrested Today at Secretriate.

போராட்டம் செய்ய தூண்டியதாக வதந்தி

தமிழ்நாடு அரசு செவிலியர்களை நான் போராட்டம் செய்ய அழைத்ததாக ஒரு செய்தி பரவுவதாக எனக்கு தெரியபடுத்தப்பட்டது, நனோ (உமாபதி) அல்லது இந்த இணையதள உறுப்பினர்களோ எக்காரணத்தை முன்னிட்டும் அரசுக்கு எதிராக செயல்பட இணையதள வசகர்களை நிர்பந்தித்தது இல்லை,

நோக்கம்:

நமது  இணையதளம் தனிமனித புகழிற்காகவோ, அல்லது தவறான செய்திகளை பரப்பும் நோக்கத்திற்காகவோ துவங்கப்படவில்லை,

அதே நேரத்தில் ஒரு சார்பு நோக்குடன் யாரையும்  ஆதரித்தும், அல்லது புறக்கணித்தும் செயல்படவும் துவங்கவில்லை,

நமது செவிலியர்கள் அறிய வேண்டிய தகவல்களை உடனுக்குடன்  தர விழையும் ஒரு தகவல் தொடர்பு சாதனமாக மட்டுமே செயல்படவேண்டும் என்ற எண்ணத்துடனும்,

பத்திரிகை, மற்றும் தகவல் தொடர்பு சாதன தர்மத்திற்கு உட்பட்டும் தகவல்களை  உண்மைக்கு புறம்பாக தராமல், நடுநிலை காக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு செயல்பட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் துவங்கப்பட்டது

நமது இணையதளம் தகவல்களை தர முன்னுரிமை அளிக்கும் அதே வேலையில் அரசு அமைப்புகளையோ, அரசு நர்சுகள் சங்கத்தையோ எக்காரணத்தை முன்னிட்டும்  நிர்ப்பந்திக்கவில்லை,

இது போன்ற தவறான செய்திகளை பரப்பும் விஷமிகளை சட்டத்தின் முன் நிறுத்தவும் நான் தயங்க மாட்டேன் என்பதை பகிரங்கமாக இதன் வழி தெரிவித்துக் கொள்கிறேன்,


வேண்டுகோள்:

நமது இணையதளம் அரசு செவிலியர்களுக்கு தேவையான தகவல்களை தர வேண்டும் என்ற நோக்கத்தில் துவங்கப்பட்டது, இது போன்ற வதந்தி தகவல்களை நமது இணையதள பார்வையாளர்களோ அல்லது தமிழ்நாடு அரசு செவிலியர்களோ நம்ப வேண்டாம்

இதனால் நமது இணையதளத்திற்கு களங்கம் ஏற்படும் நிலை வந்தால் நமது இணையதளம் முற்றிலுமாக முடக்கப்படும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.